ஐபிஎல் தொடரில் மோசமான சாதனையை படைத்த ரோஹித் சர்மா!
ஐபிஎல் தொடரில் அதிகமுறை ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்த வீரர்கள் பட்டியலில் தினேஷ் கார்த்திக்கின் சாதனையை ரோஹித் சர்மா சமன்செய்துள்ளார்.
ஐபிஎல் 17ஆவது சீசனில் இன்று நடைபெற்ற 14ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, அதன்படி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் டிரென்ட் போல்ட் மற்றும் யுஸ்வேந்திர சஹால் ஆகியோரது பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
அதன்படி அணியின் டாப் ஆர்டர் வீரர்களான ரோஹித் சர்மா, நமன் தீர், டெவால்ட் ப்ரீவிஸ் ஆகியார் தாங்கள் எதிர்கொண்ட முதல் பந்திலேயே விக்கெட்டுகளை இழந்தனர். அதிலும் குறிப்பாக மூவரது விக்கெட்டையும் வீழ்த்தியது வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் தான். அவர்களைத் தொடர்ந்து இஷான் கிஷானும் 16 ரன்களில் பெவிலியன் திரும்பிய, கேப்டன் ஹர்திக் பாண்டியா தனது பங்கிற்கு 34 ரன்களைச் சேர்த்தார்.
Trending
அவருக்கு துணையாக விளையாடிய திலக் வர்மாவும் 32 ரன்களில் ஆட்டமிழக்க, மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்களை மட்டுமே சேர்த்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தரப்பில் டிரென்ட் போல்ட் மற்றும் யுஸ்வேந்திர் சஹால் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து எளிய இலக்கை நோக்கி ரஜாஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடி வருகிறது.
இந்நிலையில் இப்போட்டியில் ரோஹித் சர்மா தனது முதல் பந்திலேயே ஆட்டமிழந்ததன் மூலம் மோசமான சாதனை ஒன்றையும் படைத்துள்ளார். அதன்படி ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிகமுறை ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்த வீரர் எனும் தினேஷ் கார்த்திக்கின் சாதனையை ரோஹித் சர்மா சமன்செய்துள்ளார். முன்னதாக தினேஷ் கார்த்திக் ஐபிஎல் தொடரில் 17 முறை ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து முதலிடத்தில் இருந்தார்.
Golden Duck For Rohit Sharma!#IPL2024 #MIvRR #RohitSharma #Cricket pic.twitter.com/ANPJ2Y4V4n
— CRICKETNMORE (@cricketnmore) April 1, 2024
இந்நிலையில் இன்றைய போட்டியில் ரோஹித் சர்மா ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்ததன் மூலம் 17 முறை ஆட்டமிழந்து, தினேஷ் கார்த்திக்கின் சாதனையை சமன்செய்துள்ளார். இந்த பட்டியலில் ரோஹித் சர்மா மற்றும், தினேஷ் கார்த்திக் இருவரும் தலா 17 முறை ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்து முதலிடத்தையும், கிளென் மேக்ஸ்வெல், சுனில் நரைன், மந்தீப் சிங் ஆகியோர் தலா 15 முறை ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்து அடுத்தடுத்த இடத்தை பிடித்துள்ளனர்.
ஐபிஎல் தொடரில் அதிகமுறை ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்த வீரர்கள்
- ரோஹித் சர்மா - 17 முறை
- தினேஷ் கார்த்திக் - 17 முறை
- கிளென் மேக்ஸ்வெல் - 15 முறை
- பியூஷ் சாவ்லா - 15 முறை
- மந்தீப் சிங் - 15 முறை
- சுனில் நரைன் - 15 முறை
Win Big, Make Your Cricket Tales Now