
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணியானது ஹர்திக் பாண்டியா கேப்டன்சியின் கீழ் நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடிய முதல் மூன்று போட்டிகளிலும் அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்து ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.
முன்னதால் இந்தாண்டு ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு முன்னரே மும்பை இந்தியன்ஸ் அணியில் பல்வேறு குழப்பங்களும் சர்ச்சைகளும் எழுந்தன. ஏனெனில் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக ஹர்திக் பாண்டியாவை வாங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியானது, தங்கள் அணியின் வெற்றிகரமான கேப்டனும், அணிக்கு 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தவறுமான ரோஹித் சர்மாவை கேப்டன் பொறுப்பிலிருந்து விலக்கியது.
மேலும் டிரேடிங் முறையில் வாங்கப்பட்ட ஹர்திக் பாண்டியாவை அணியின் புதிய கேப்டனாக அறிவித்தது பெரும் சர்ச்சைகளுக்கு வழிவகுத்தன. குறிப்பாக மும்பை இந்திய்ன்ஸ் அணியில் உள்ள முக்கிய வீரர்கள் ஜஸ்ப்ரித் பும்ரா, சூர்யகுமார் யாதவ் உள்ளிட்ட பல வீரர்கள் இந்த முடிவினால் அருப்தியடைந்ததுடன், தங்களது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி எதிர்ப்பை பதிவுசெய்திருந்தனர்.