
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து வருகிறது. முதல் போட்டி ஜெய்பூரிலும் இரண்டாவது போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. இரண்டு போட்டிகளிலும் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டி இன்று மாலை கொல்கத்தாவில் நடைபெற உள்ளது.
டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி தோற்ற பின்னர், இந்தியா- நியூசிலாந்து டி20 தொடர் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்தன. முதல் இரண்டு போட்டியில் வென்றதால் இந்தத் தொடரை இந்திய அணி ஏற்கெனவே வென்றுவிட்டது. உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு ஏற்பட்ட காயத்தை இந்த டி20 தொடரின் வெற்றி சற்று ஆறுதலாய் அமைந்திருக்கிறது.
குறிப்பாக புதிய கேப்டன் ஆக ரோஹித் சர்மா பதவியேற்ற முதல் தொடரிலேயே வெற்றி என்னும் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார். கேப்டன் பொறுப்பில் மட்டுமல்லாது ஒரு பேட்ஸ்மேன் ஆகவும் தனி முத்திரை பதித்துள்ளார் ரோஹித் சர்மா.