
நடப்பாண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் 30ஆம் தேதி முதல் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் தொடங்க உள்ளன. இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் மற்றும் நேபால் என 6 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன.
இத்தொடருக்கான அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இதில் கேப்டனாக ரோஹித் சர்மாவும், துணைக்கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் அறிமுக வீரர் திலக் வர்மா மற்றும் காயத்திலிருந்து மீண்ட கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதேசமயம் பெரிதும் எதிபார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன் கூடுதல் வீரர் பட்டியளில் இந்திய அணியுடன் பயணிக்கவுள்ளது. ஆனால் இந்த அணியில் நட்சத்திர வீரர்களான ரவிச்சந்திரன் அஸ்வின், யுஸ்வேந்திர சஹல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதுகுறித்து கேப்டன் ரோகித் சர்மா விளக்கம் கொடுத்துள்ளார்.