Advertisement
Advertisement
Advertisement

இமாலய சாதனையை நிகழ்த்திய ரோஹித் சர்மா!

விண்டீஸ் அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியின் மூலம் இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan August 07, 2022 • 12:23 PM
 Rohit Sharma Overtakes Shahid Afridi To Become 2nd Highest Six Hitter In International Cricket
Rohit Sharma Overtakes Shahid Afridi To Become 2nd Highest Six Hitter In International Cricket (Image Source: Google)
Advertisement

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, விண்டீஸ் அணியுடன் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவில் இந்திய அணி இரண்டு போட்டியிலும், விண்டீஸ் அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான நான்காவது டி.20 போட்டி அமெரிக்காவின் ப்ளோரிடா மைதானத்தில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற விண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததை தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 44 ரன்களும், ரோஹித் சர்மா 33 ரன்களும் எடுத்தனர்.

Trending


இதன்பின் 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய விண்டீஸ் அணி நிக்கோலஸ் பூரண் மற்றும் ரோவ்மன் பவல் ஆகியோர் தலா 24 ரன்கள் எடுத்து கொடுத்தாலும், மற்ற வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து நடையை கட்டியதால் 19.1 ஓவரில் 132 ரன்கள் எடுத்த போது அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்த விண்டீஸ் அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.

இந்தநிலையில், இந்த போட்டியின் மூலம் இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா கிரிக்கெட் வரலாற்றில் புதிய ஒரு இடத்தை பிடித்துள்ளார். இந்த போட்டியில் 3 சிக்ஸர்கள் விளாசியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் தனது 477வது சிக்ஸரை பதிவு செய்த ரோஹித் சர்மா, இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் வரிசையில், முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஷாகித் அஃப்ரிடியை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த பட்டியலில் கிரிஸ் கெய்ல் 533 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த டாப் 5 வீரர்கள்;

  • கிரிஸ் கெய்ல் – 533
  • ரோஹித் சர்மா – 477
  • ஷாகித் அப்ரிடி – 476
  • பிராண்டன் மெக்கல்லம் – 398
  • மார்டின் கப்தில் – 379


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement