Advertisement

கோலியை பின்னுக்கு தள்ளிய ரோஹித்!

சர்வதேச டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் ரோஹித் சர்மா முதல்முறையாக 5ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

Advertisement
Rohit Sharma Overtakes Virat Kohli In ICC Test Rankings, Root Becomes No. 1
Rohit Sharma Overtakes Virat Kohli In ICC Test Rankings, Root Becomes No. 1 (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Sep 01, 2021 • 04:01 PM

இந்திய கிரிக்கெட்டின் ஹிட்மேன் ரோஹித் சர்மா. இவர் இந்திய அணிக்காக இதுவரை 42 டெஸ்டுகளில் விளையாடி 2909 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 7 சதங்களும் 14 அரை சதங்களும் எடுத்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 36, 12*, 83, 21, 19, 59 என ரன்கள் எடுத்து சிறப்பாக விளையாடி வருகிறார்.

Bharathi Kannan
By Bharathi Kannan
September 01, 2021 • 04:01 PM

இதையடுத்து சமீபத்தில் ஐசிசி வெளியிட்ட டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முதல்முறையாக 5ஆம் இடத்தைப் பிடித்துள்ளார்ரோஹித் சர்மா. 2019 அக்டோபரில் 54ஆவது இடத்தில் இருந்த ரோஹித் சர்மா, தொடர்ந்து ரன்கள் குவித்து தற்போது 5ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். 

Trending

Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!

மேலும் ஐந்தாம் இடத்திலிருந்து விராட் கோலியை பின்னுக்குத் தள்ளி ரோஹித் சர்மா இதனை படைத்துள்ளார். இப்பட்டியலின் முதல் இடத்தில் இங்கிலாந்தின் ஜோ ரூட்டும் அடுத்த மூன்று இடங்களில் கேன் வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுசாக்னே ஆகியோரும் உள்ளார்கள்.  

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement