பிளேயிங் லெவனில் இஷான், சூர்யாவுக்கு இடம் - ரோஹித் சர்மா!
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் இஷான் கிஷான், சூர்யகுமார் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்படும் என இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்தியா, நியூசிலாந்து அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று ஹைதராபாத்தில் மதியம் 1:30 மணிக்கு தொடங்குகிறது. இந்த தொடரில் கே எல் ராகுல் உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ள நிலையில் ஸ்ரேயாஸ் காயம் காரணமாக வெளியேறி இருக்கிறார். இதனால் இந்திய அணிக்குள் ரஜட் பட்டிதார் சேர்க்கப்பட்டுள்ளார். கே எல் ராகுல் இந்த தொடரில் இல்லை என்பதால் அவருக்கு பதிலாக யார் களமிறங்குவார் என்பது குறித்து ரோஹித் சர்மா அறிவித்துள்ளார்.
இது குறித்து பேசி அவர், “இஷான் கிஷனுக்கு தான் நியூசிலாந்து தொடரில் வாய்ப்பு வழங்குகிறோம் என்றார்.மேலும் பேசிய அவர் இசான் கிஷன் பேட்டிங்கில் நடுவரசையில் விளையாடுவார். வங்கதேசத்துக்கு எதிராக அவர் சிறப்பாக விளையாடிய நிலையில் தற்போது அவருக்கு வாய்ப்பு கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நாளை ஆட்டத்தில் நாங்கள் எதையும் அசாதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டோம்.
Trending
நாங்கள் சிறந்த 11 வீரர்களை வைத்து விளையாடுவோம்ம் எந்த வீரர்களை தேர்வு செய்வது என்பது குறித்து முடிவெடுப்பதில் நிச்சயம் சவால்கள் இருக்கும். நம்பர் எட்டு அல்லது ஒன்பதாவது இடத்தில் ஒரு ஆல்ரவுண்டர் இருந்தால் நன்றாக இருக்கும் என்பதால் ஷர்துல் தாக்கூரை அணியில் சேர்த்து இருக்கிறோம்.அவர் எட்டாவது இடத்தில் பேட்டிங் செய்யும்போது அணிக்கு கொஞ்சம் சாதகமாக இருக்கும். ஏனென்றால் நடுவரிசை விக்கெட்டுகள் விழுந்தால் அவர்கள் அணியை காப்பாற்றுவார்கள்.
இந்த தொடரில் எங்களுக்கு மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். வாஷிங்டன் சுந்தர், சபாஷ் அஹமத் போன்ற வீரர்களும் பேட்டிங் செய்யக் கூடியவர்கள். இதேபோன்று இரண்டு தலை சிறந்த சுழற் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். இதனால் பிளேயிங் லெவனில் தேர்வு செய்வதற்கு முன் பல விஷயங்கள் குறித்து யோசிக்க வேண்டியது இருக்கிறது” என்று ரோஹித் சர்மா கூறியுள்ளார்.
இன்றைய ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவும், கேஎல் ராகுலுக்கு பதிலாக இஷான் கிசனும் விளையாடுகிறார்கள். இதைப் போன்று அக்சர் பட்டேலுக்கு பதில் சாகுல் அல்லது வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்படலாம். இதேபோன்று முகமது சமிக்கு நாளைய போட்டியில் ஓய்வு வழங்கப்பட்டு சர்துல் தாக்கூர் அணியில் விளையாடலாம். ஒருவேளை ஷர்துல் தாக்கூர் அணிக்கு திரும்பினால் அக்சர்பட்டிலுக்கு பதில் சாகல்தான் அணிக்கு திரும்புவார். ஏனென்றால் சாஹல், குல்திப் யாதவ் ஜோடி சுழற்பந்து வீச்சில் ஒரு காலத்தில் சிறப்பாக செயல்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now