
இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் எதிரான இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் டோமினிக்காவில் இன்று தொடங்கியது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி தோல்வியை தொடர்ந்து இந்திய டெஸ்ட் அணியை கடும் விமர்சனத்திற்கு உள்ளானது . இதனால் வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் ருதுராஜ் மற்றும் ஜெய்ஸ்வால் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் சர்ஃப்ராஸ் கானுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுவதாக இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் கவாஸ்கர் உள்ளிட்ட வீரர்களும் கிரிக்கெட் விமர்சகர்களும் கருத்து தெரிவித்திருந்தனர். மேலும் அஜித் அகர்க்கர் தேர்வு குழு தலைவராக பொறுப்பேற்ற பின் தேர்வு செய்யப்பட்ட டி20 அணியில் ரிங்கு சிங்கிற்க் இடம் பெறவில்லை.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக இந்த ஐபிஎல் சீசனில் மிகச் சிறப்பாக விளையாடியவர் ஒரே ஓவரில் 31 ரன்களை எடுத்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றதும் குறிப்பிடத்தக்கது . இந்நிலையில் அவர் டி20 அணியில் இடம் பெறாதது பலருக்கும் மிகுந்த ஏமாற்றத்தை அளித்திருக்கிறது . இது தொடர்பாக தேர்வு குழுவினரையும் இந்திய அணியையும் முன்னாள் வீரர்களும் கிரிக்கெட் விமர்சிகர்களும் கடும் விமர்சனங்களை முன் வைத்து பேசி வருகின்றனர் .