
இந்த ஆண்டு அக்டோபர் - நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலிய மண்ணில் டி20 உலக கோப்பை தொடரானது நடைபெற உள்ளது. இந்த தொடருக்காக அனைத்து அணிகளும் தற்போது மும்முரமாக தயாராகி வரும் வேளையில் இந்திய அணியும் தங்களது வலுவான அணியை தற்போது கட்டமைத்து வருகிறது. அந்த வகையில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தற்போது பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளித்து பலமான அணியாக கட்டமைக்கப்பட்டு வருகிறது.
இந்த டி20 உலககோப்பை தொடரை தொடர்ந்து இந்தியாவில் நடைபெற உள்ள 50 ஓவர் உலக கோப்பையும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளதால் தற்போது இந்திய அணி வீரர்களின் தேர்வில் அதிக கவனத்தை செலுத்தி வருகிறது.
இந்நிலையில் அடுத்த ஒருநாள் போட்டிகளுக்கான உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய அணியின் அனுபவ துவக்க வீரரான ஷிகார் தவானை அணியில் இடம்பெறச் செய்ய ரோஹித் சர்மா அதிகம் விரும்புவார் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான பிரக்யான் ஓஜா கூறியுள்ளார்.