
நடப்பாண்டு ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பத்து போட்டிகளில் விளையாடி 184 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் சராசரி வெறும் 18 ரன்கள் தான். இதில் ஒரு அரை சதம் மட்டுமே அடங்கும். ரோஹித் சர்மா கடைசியாக விளையாடிய நான்கு இன்னிங்ஸில் மொத்தமாகவே 5 ரன்கள் தான் அடித்திருக்கிறார்.
குறிப்பாக தொடர்ந்து இரண்டு முறை டக் அவுட் ஆகி இருக்கிறார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் அதிக டக் அவுட்டான வீரர் என்ற சோகமான சாதனையும் ரோஹித் சர்மா பெற்றிருக்கிறார். நேற்றைய சிஎஸ்கே எதிரான ஆட்டத்தில் ரோஹித் சர்மா தேவையில்லாமல் ஒரு ஸ்கூப் சாட் ஆடினார். அது நேராக பில்டரிடம் கேட்ச் ஆனது. இதன் மூலம் ஐபிஎல் தொடரில் 16 ஆவது டக் அவுட்டை ரோஹித் சர்மா பெற்றார்.
இந்த நிலையில் கிரிக்கெட் வர்ணனையில் ஈடுபட்டு இருந்த முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் ரோஹித் சர்மாவை கடுமையாக சாடியுள்ளார். இது குறித்து பேசிய அவர், “ரோஹித் சர்மா நீங்கள் உங்கள் பெயரை மாற்றிக் கொள்ளுங்கள். ரோஹித் என்பதை நோ- ஹிட் சர்மா என மாற்றி கொள்ளுங்கள். நான் மட்டும் மும்பை அணி கேப்டனாக இருந்திருந்தால் உங்களை அணியை விட்டு நீக்கி இருப்பேன்” என்று கடுமையாக சாடினார்.