
Rohit Sharma Should Take A Little Bit Of A Breather Himself, Come Back Fresh For WTC Final: Sunil Ga (Image Source: Google)
நடப்பு ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியை ரோகித் வழிநடத்தி வருகிறார். இதுவரை இந்த சீசனில் 7 போட்டிகளில் விளையாடி உள்ள மும்பை அணி 3 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. 4 போட்டிகளில் தோல்வியைத் தழுவி உள்ளது.
வலுவான பேட்டிங் லைன் அப் கொண்டுள்ள மும்பை அணிக்கு பவுலிங் தான் சங்கடம் கொடுத்து வருகிறது. நடப்பு சீசனில் 7 போட்டிகளில் விளையாடி உள்ள ரோகித், 181 ரன்கள் எடுத்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 25.86 என உள்ளது.
இந்நிலையில், எதிர்வரும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு ஃபிட்டாக இருக்கும் வகையில் ரோகித் சர்மா கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம் என தான் கருதுவதாக சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.