சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மாபெரும் சாதனை நிகழ்த்திய ரோஹித் சர்மா!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியின் மூலம் இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
இந்தியா வந்துள்ள ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றிவிட்ட நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் டி.20 போட்டி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு ஜெய்ஸ்வல்(4), விராட் கோலி (0), சஞ்சு சாம்சன் (0) மற்றும் ஷிவம் துபே (1) ஆகியோர் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்து நடையை கட்டி பெரும் ஏமாற்றம் கொடுத்தனர். இதனால் இந்திய அணி வெறும் 22 ரன்கள் எடுப்பதற்குள் 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது. ஆனால் மறுபக்கம் தன் மீதான அனைத்து விமர்ச்சனங்களுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் கேப்டன் ரோஹித் சர்மா தரமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.
Trending
இப்போட்டியில் கடைசி வரை விக்கெட்டை இழக்காமல் இருந்த ரோஹித் சர்மா ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்ததோடு மொத்தம் 69 பந்துகளில் 8 சிக்ஸர் மற்றும் 11 பவுண்டரிகளுடன் 121 ரன்கள் எடுத்து அசத்தினார். அவருடன் கடைசி ஓவரின் கடைசி மூன்று பந்துகளிலும் சிக்ஸர் அடித்து மாஸ் காட்டிய ரிங்கு சிங் 39 பந்துகளில் 6 சிக்ஸர் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 69 ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலமும், 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்துள்ள இந்திய அணி 212 ரன்கள் குவித்துள்ளது.
இந்நிலையில், இந்த போட்டியில் சதம் அடித்ததன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் தனது 5ஆவது சதத்தை பதிவு செய்த ரோஹித் சர்மா, சர்வதேச டி20 போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார். மேலும் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக சதம் அடித்த வீரர் எனும் சாதனையையும் தனதாக்கியுள்ளார்.
சர்வதேச டி20 போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியல்
- ரோஹித் சர்மா – 5 சதம்
- சூர்யகுமார் யாதவ் – 4 சதம்
- கிளன் மேக்ஸ்வெல் – 4 சதம்
Win Big, Make Your Cricket Tales Now