
ஆசியக் கோப்பை 2022இன் சூப்பர் 4 சுற்று தற்போது நடைபெற்று வருகிறது. இந்த சூப்பர் 4 சுற்றில், இந்திய அணி முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக தோற்ற நிலையில், நேற்று இலங்கையை எதிர்கொண்டது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் ரோஹித் சர்மா 72, சூர்யகுமார் யாதவ் 34 ஆகியோர் மட்டுமே 20+ ரன்களை அடித்தார்கள். ஹார்திக், ரிஷப் பந்த் தலா 17 ரன்களை எடுத்த நிலையில், இறுதியில் அஸ்வின் 7 பந்துகளில் 15 ரன்களை சேர்த்ததால், இந்தியா 20 ஓவர்கில் 173/8 ரன்களை எட்டியது.
அதன்பின் இலக்கை துரத்திக் களமிறங்கிய இலங்கை அணியில் தொடக்க வீரர்கள் பதும் நிஷங்கா 52, குஷல் மெண்டிஸ் 57 ஆகியோர் சிறப்பான தொட தந்தனர். அடுத்து ராஜபக்சா 25, ஷனகா 33 ஆகியோர் அதிரடி காட்டியதால், இலங்கை அணி 19.5 ஓவர்களில் 174/4 ரன்களை சேர்த்து, 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்று, இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.