Advertisement

ஃபில்டிங் குறித்து கேள்வி எழுப்பியவர்களுக்கு பதிலடி கொடுத்த ரோஹித் சர்மா; வைரல் காணொளி!

இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா ஸ்லீப்பில் நின்று கேட்ச் பிடித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
ஃபில்டிங் குறித்து கேள்வி எழுப்பியவர்களுக்கு பதிலடி கொடுத்த ரோஹித் சர்மா; வைரல் காணொளி!
ஃபில்டிங் குறித்து கேள்வி எழுப்பியவர்களுக்கு பதிலடி கொடுத்த ரோஹித் சர்மா; வைரல் காணொளி! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jan 25, 2024 • 12:24 PM

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஹைதராபாத்தில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இந்திய அணியை பந்துவீச அழைத்தார். அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்க வீரர்கள் பென் டக்கெட் - ஸாக் கிரௌலி இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 

Bharathi Kannan
By Bharathi Kannan
January 25, 2024 • 12:24 PM

தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பென் டக்கெட் 7 பவுண்டரிகளுடன் 35 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஒல்லி போப் ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலை விக்கெட்டை இழந்தார். அவர்களைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான ஸாக் கிரௌலியும் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். அதனைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்துள்ள ஜோ ரூட் - ஜானி பேர்ஸ்டோவ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Trending

இதனால் உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து 108 ரன்களைச் சேர்த்திருந்தது. இந்நிலையில் இங்கிலாந்து அணி தரப்பில் மூன்றாம் இடத்தில் களமிறங்கிய ஒல்லி போப், ரவீந்திர ஜடேஜா வீசிய பந்தில் ஸ்லீப்பில் நின்ற ரோஹித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்த ஆட்டமிழந்தார். சமீப காலமாக ரோஹித் சர்மாவின் ஃபிட்னஸ் குறித்த கேள்விகள் பேசுபெருளாக மாறி வந்தது.

 

குறிப்பாக அவர் அதிக எடையில் இருப்பதாகவும், அதனால் அவரால் ஃபில்டிங்கில் சிறப்பாக செயல்படமுடியாது என்று விமர்சனங்களும் எழுந்தது. ஆனால் தனது எடையை அவர் குறைத்ததுடன் உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக யோ-யோ டெஸ்டிலும் சிறப்பான மதிப்பெண்களைப் பெற்று தனது ஃபிட்னஸை நிரூபித்தார். இந்நிலையில் இப்போட்டியில் அவர் ஸ்லீப்பில் கேட்ச் பிடித்து அசத்தியதன் மூலம் தன் மீதான விமர்சனங்களுக்கும் பதிலடிக்கொடுத்துள்ளார். இந்நிலையில் இக்காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement