
ஐசிசி உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற 17ஆவது லீக் போட்டியில் இந்தியா - வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து 50 ஓவர்களில் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 256/8 ரன்கள் மட்டுமே எடுத்தது.
குறிப்பாக அந்த அணிக்கு 94 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து ஓப்பனிங் ஜோடியில் லிட்டன் தாஸ் 66 ரன்களும், தன்ஸித் ஹசன் 51 ரன்களும் எடுத்து நல்ல தொடக்கத்தைக் கொடுத்தனர். ஆனால் அதன் பின் வந்த நஜ்மல் சான்டோ 8, மெஹதி ஹசன் 3, ஹிரிடாய் 16 என முக்கிய பேட்ஸ்மேன்கள் குறைந்த ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.
ஆனாலும் லோயர் மிடில் ஆர்டரில் ரஹீம் 38, முஹ்முதுல்லா 46 ரன்கள் எடுத்து ஓரளவு காப்பாற்றிய நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ், ரவீந்திர ஜடேஜா மற்றும் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.