பாகிஸ்தான் அணியில் உள்ள அனைத்து வேகப் பந்துவீச்சாளர்களும் சமமானவர்கள் - ரோஹித் சர்மா!
பாகிஸ்தான் அணியில் உள்ள வேகப்பந்துவீச்சாளர்களில் யாரை எதிர்கொண்டு விளையாடுவது மிகவும் கடினமானது? என்ற கேள்விக்கு இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பதிலளித்துள்ளார்.
இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் முதலில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இரண்டையும் முடித்துக் கொண்டு தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
முதல் இரண்டு தொடர்களும் முடிவடைந்ததும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி இருவரும் அணியை விட்டு வெளியேறி வந்திருக்கிறார்கள். இதில் விராட் கோலி நாடு திரும்ப, ரோஹித் சர்மா அமெரிக்காவில் தன்னுடைய கிரிக்கெட் அகாடமியை திறக்கும் நிகழ்வில் பங்கு பெற்று இருக்கிறார்.
Trending
இந்த நிகழ்வில் அவரிடம் பல கேள்விகள் முன்வைக்கப்பட்டு வருகிறது. எல்லா கேள்விகளுக்குமே அவர் முடிந்த வரையில் வெளிப்படையாகவே அவருடைய பாணியில் பதில் கூறிக்கொண்டு வருகிறார். அந்தவகையில் இந்திய அணியின் நான்காவது இடத்திற்கான பேட்ஸ்மேன், 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் விளையாட முடியாமல் போனது, 2024 டி20 உலகக் கோப்பையில் விளையாட இருப்பது என பல முக்கிய தகவல்களை அவர் வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில் கிரிக்கெட் அகாடமி திறப்பு விழா நிகழ்ச்சியில் ரோஹித் சர்மாவிடம் பாகிஸ்தான் அணியில் உள்ள வேகப்பந்துவீச்சாளர்களில் யாரை எதிர்கொண்டு விளையாடுவது மிகவும் கடினமானது? என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது. இதற்கு வழக்கம் போல் ரோகித் சர்மா தன்னுடைய நகைச்சுவையான பாணியில் பதில் கூறினார்.
இந்தக் கேள்விக்கு ரோஹித் சர்மா பதில் அளித்து பேசிய பொழுது, “பாகிஸ்தான் அணியில் உள்ள அனைத்து வேகப் பந்துவீச்சாளர்களும் சமமானவர்கள். நான் இதில் எந்த ஒரு தனிப்பட்ட பந்துவீச்சாளரையும் தேர்வு செய்யப் போவது இல்லை. ஏனென்றால் இப்படி தனிப்பட்ட ஒரு வீரரை தேர்வு செய்வது கடைசியில் சர்ச்சையாக முடிகிறது.
நான் இப்பொழுது ஒரு வீரரை இதற்கு தேர்வு செய்தால், இன்னொரு வீரர் அது குறித்து மோசமாக உணர்வார். நான் இரண்டு வீரர் பெயரை எடுத்தால் மூன்றாவதாக இருக்கக்கூடிய வீரர் மோசமாக உணர்வார். இதை எடுத்துக் கொண்டால் இது இப்படியே நீண்டு கொண்டு போகும். என்னைப் பொறுத்த வரையில் அவர்கள் அனைவருமே திறமையான பந்துவீச்சாளர்கள்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now