வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக இளம் படையை களமிறக்கும் இந்தியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணி நாளை அறிவிக்கப்பட உள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது இந்த தொடரில் இந்திய அணியில் சீனியர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு பல்வேறு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளது
தென் ஆப்பிரிக்க தொடர் ஏமாற்றத்துடன் முடிவடைந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான சொந்த மண்ணில் நடைபெறும் தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. இந்த நிலையில், தொடர்ந்து பயோ பபுளில் இருப்பதால் அணியில் உள்ள சீனியர்களான விராட் கோலி, கே.எல்.ராகுல், அஸ்வின், பும்ரா ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது
Trending
எனினும் பலம் வாய்ந்த வெஸ்ட் இண்டீஸுக்கு அணிக்கு எதிராக களமிறங்கும் போது சீனியர்கள் இல்லை என்றால் இந்திய அணிக்கு அது பலவீனமாக அமையும் என்ற அச்சமும் எழுந்துள்ளது. இதனால் மொத்தமாக ஓய்வு வழங்காமல் சுழற்சி முறையில் ஓய்வு வழங்க தேர்வுக்குழுத் தலைவர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடர் அணியில் ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் இடம்பெற உள்ளனர். தென்னாப்பிரிக்க தொடரில் சிறப்பாக செயல்பட்ட ஷிகர் தவானும், ரோகித் சர்மாவுமே தொடக்க வீரராக களமிறங்க உள்ளனர். இதில் எதாவது ஒரு போட்டியில் ருத்துராஜ்க்கு வாய்ப்பு வழங்க ரோஹித் முடிவு எடுப்பார். கே.எல்.ராகுல் அணியில் இடம்பெற்றால் நடுவரிசையில் களமிறங்குவார் என தெரிகிறது.
இதே போன்று, ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் இந்திய அணிக்கு திரும்ப உள்ளனர். தமிழக வீரர் ஷாரூக்கானுக்கு டி20 தொடரில் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. இளம் சுழற்பந்துவீச்சாளர் ரவி பிஸ்னோய், வேகப்பந்துவீச்சாளர் ஆவேஷ் கான் ஆகியோரும் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். அனுபவமும், இளமையும் கலந்த அணியாக இந்திய அணி தேர்வு செய்யப்பட உள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now