
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை விட 173 ரன்கள் பின்தங்கியிருந்தது. இதனை அடுத்து இரண்டாம் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 270 ரன்களுக்கு டிக்ளேர் செய்ய, இந்திய அணிக்கு 444 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இதனை இந்திய அணி செய்தபோது ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் இருவரும் சிறப்பாக விளையாடி வந்தனர். முதல் விக்கெட்டுக்கு 41 ரன்கள் சேர்த்தனர். அப்போது சுப்மன் கில் அடித்த பந்து ஸ்லிப் திசையில் சென்றது. அதனை கிரீன் பிடித்தார். கேட்சா? இல்லையா? என்பது குறித்த முடிவுகள் மூன்றாவது நடுவருக்கு சென்றது.
2-3 முறை ரிப்ளைவில் பார்த்ததில் சரியாக தெரியவில்லை. ஆகையால் சந்தேகம் இருக்கும் பட்சத்தில் முடிவுகள் பேட்ஸ்மேனுக்கு சாதகமாக கொடுக்கப்படும். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் மூன்றாம் நடுவர் அவுட் என்று கொடுத்துவிட்டார். அதன் பிறகு வெளிவந்த புகைப்படங்களில் பந்து தரையில் பட்டது தெளிவாக தெரிந்தது. இதனால் ஷுப்மன் கில் விக்கெட் விவகாரம் சர்ச்சைக்குரியதாக மாறியது.