
டி20 உலகக் கோப்பைப் போட்டியுடன் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய கோலியை, ஒருநாள் கேப்டன் பொறுப்பிலிருந்து பிசிசிஐ நீக்கி, ரோஹித் சர்மாவை நியமித்தது. தென் ஆப்பிரி்க்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்தபின் டெஸ்ட் கேப்டன் பொறுப்பிலிருந்தும் விராட் கோலி திடீரென விலகினார். விராட் கோலி கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியது கிரிக்கெட்ரசிகர்களை பெரிய அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன், “இன்றுள்ள நவீன கால கிரிக்கெட் வீரரான விராட் கோலியைப் பற்றி விமர்சிப்பவர்கள் என்னைப் பொறுத்தவரை முட்டாள்கள். ஏனென்றால், இதுபோன்ற பயோ-பபுள் சூழலில் இருந்து கொண்டு விளையாடுவது கடினம்.
ஆதலால், கோலியின் முடிவை விமர்சிப்பதும், அவரை விமர்சிப்பது நியாயமற்றது. விராட் கோலியை நீங்கள் யாரும் பார்த்தது இல்லை. கோலிக்கு ரசிகர்கள் பட்டாளம் தேவை, கோலி சிறந்த பொழுதுபோக்குநபர்.