
இந்திய அணியின் ஃபினிஷர் ரோலில் கலக்கி வந்த தினேஷ் கார்த்திக், திடீரென்று ஆசிய கோப்பை போட்டியில் விளையாட வாய்ப்பு தராமல் இந்திய அணி நிர்வாகம் விணடித்தது. இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தினேஷ் கார்த்திக் 5 பந்துகளில் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்த நிலையில், தினேஷ் கார்த்திக் மீது உளவியல் ரீதியாக தாக்குதல் நடத்தப்படும் வகையில், நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி நிர்வாகம் செயல்பட்டது. நேற்றைய ஆட்டத்தில் 13.3 ஆவது ஓவரில் சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழந்த போது, அந்த இடத்தில் தினேஷ் கார்த்திக் பேட்டிங் செய்ய வந்திருக்க வேண்டும்.
தினேஷ் கார்த்திக் அப்போது களத்திற்கு வந்திருந்தால், தன்னை நிலைநிறுத்தி கொள்ள வாய்ப்பு கிடைத்திருக்கும். அதன் பிறகு தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவித்திருப்பார். ஹர்திக் பாண்டியாவுக்கும் கொஞ்சம் அழுத்தம் குறைந்திருக்கும். இந்திய அணியின் ஸ்கோரும் ஒரு 20 ரன்கள் கூடுதலாகி இருந்திருக்கும்.