
Rohit Sharma’s daughter Samaira gives update on father’s health, WATCH (Image Source: Google)
இந்தியா - இங்கிலாந்து இடையே கடந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட ஒரு டெஸ்ட் போட்டி வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் எட்ஜ்பாஸ்டனில் நடக்கிறது. இந்த போட்டிக்காக இந்திய அணி தீவிரமாக தயாராகிவரும் நிலையில், கேப்டன் ரோஹித் சர்மாவிற்கு கரோனா உறுதியானது.
லெய்செஸ்டெர்ஷைர் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் ஆடியபோது ரோஹித்துக்கு கரோனா உறுதியானது. அதனால் தான் அந்த பயிற்சி போட்டியின் 2ஆவது இன்னிங்ஸில் ரோஹித் பேட்டிங் ஆடவில்லை. கேஎல் ராகுலும் காயத்தால் பாதிக்கப்பட்டிருப்பதால், டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் மயன்க் அகர்வால் அணியில் எடுக்கப்பட்டார்.
ரோஹித் இந்த டெஸ்ட் போட்டிக்கு முன்பாக கரோனாவிலிருந்து மீண்டு வந்துவிடுவார் என்று நம்பப்படுகிறது. ஒருவேளை அவர் ஆடமுடியாத பட்சத்தில் யார் கேப்டன்சி செய்வார் என்பதுதான் பெரும் கேள்வியாக இருக்கிறது.