
விராட் கோலி கேப்டன் பொறுப்பில் இருந்து வெளியேறிய பிறகு புதிய கேப்டனாக ரோஹித் சர்மாவும் புதிய தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டும் வந்து அணியை கட்டமைத்ததற்கான முழுப் பலன் தற்பொழுது தெரிந்து கொண்டிருக்கிறது. இந்திய அணி தைரியமான இன்டென்ட்டை பேட்டிங்கில் கொண்டிருக்கவில்லை. மேலும் முதலில் பேட்டிங் செய்யும்பொழுது பெரிய இலக்கை எதிரணிக்கு வைப்பதற்கு இந்திய அணிக்கு தெளிவில்லாமல் இருக்கிறது என்று காரணம் முன் வைக்கப்பட்டது.
இதற்கு ரோஹித் சர்மா ராகுல் டிராவிட் ஜோடி சேர்ந்து, இனி எல்லா போட்டிகளையும் தைரியமாக அதிரடியாக ஆரம்பிப்பது என்கின்ற முடிவு செய்யப்பட்டது. மேலும் நல்ல ஆரம்பம் கிடைத்தால் எல்லா வீரர்களும் ஒரே மாதிரி அதிரடியாக விளையாடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது. கேப்டனாக ரோஹித் சர்மா தானே முன் நின்று அதிரடியாக விளையாடுவது என்று, கேப்டன் பொறுமப்பை ஏற்றதில் இருந்து, அதே பாணியை பின்பற்றி வருகிறார்.
இதனால் அவரது ரன் சராசரி குறைந்திருக்கிறது ஆனால் அதே சமயத்தில் ஸ்ட்ரைக் ரேட் அதிகரித்து இருக்கிறது. தற்பொழுது இரண்டு ஆண்டு காலம் இவர்கள் அணிக்குள் உருவாக்கிய அணுகுமுறை தற்பொழுது நல்ல பலனை கொடுத்து வருகிறது. அணியின் வீரர்கள் அனைவருமே தாக்குதல் பாணியில் விளையாடுவதற்கு தயாராக இருக்கிறார்கள்.