Advertisement

ஐபிஎல் 2022: வீரர்கள் ஏலத்தில் பங்கேற்கும் ரூட், வுட்!

ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசனுக்கான வீரர்கள் ஏலத்தில் இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் ஜோ ரூட் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் ஆகியோர் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
Root, Wood Contemplate Participating In IPL 2022
Root, Wood Contemplate Participating In IPL 2022 (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jan 15, 2022 • 09:30 AM

ஐபிஎல் 2022 தொடரில் 2 புதிய அணிகள், மெகா ஏலம் என பல்வேறு மாற்றங்கள் வரவிருப்பதாக எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளன. வரும் பிப்ரவரி 12 மற்றும்13ஆம் தேதிகளில் மெகா ஏலத்தை நடத்திவிட்டு, ஐபிஎல் தொடரை வரும் ஏப்ரல் 2ஆவது வாரத்தில் தொடங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Bharathi Kannan
By Bharathi Kannan
January 15, 2022 • 09:30 AM

இந்நிலையில் பழைய 8 அணிகளும் தக்கவைத்துக் கொண்ட வீரா்களின் பட்டியல் சமீபத்தில் வெளியானது. சிஎஸ்கே அணியில் ஜடேஜா, தோனி, மொயீன் அலி, ருதுராஜ் கெய்க்வாட் போன்றோர் தக்கவைக்கப்பட்டுள்ளார்கள். ஐபிஎல் ஏலத்துக்கு முன்பு உள்ள வீரர்களின் பட்டியலில் இருந்து 3 வீரர்களைத் தேர்வு செய்துகொள்ள இரு புதிய அணிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

Trending

மேலும் ஐபிஎல் 2022 போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூரில் பிப்ரவரி 12, 13 தேதிகளில் நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி மாத இறுதிக்கு முன்பு ஏலத்தில் பங்கு பெறும் வீரர்களின் பட்டியல் வெளியாகும் எனத் தெரிகிறது. 

இந்நிலையில் இந்த மெகா ஏலத்தில் இங்கிலாந்து டெஸ்ட் அணி கேப்டன் ஜோ ரூட் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் ஆகியோர் பங்கேற்க ஆர்வம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டை எந்த அணியும் ஒரு சீசனில் கூட ஏலம் கேட்டது கிடையாது. அதன் காரணமாக கடந்த 2018ஆம் ஆண்டிலிருந்து அவர் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்பதை தவிர்த்தார்.

அதேபோல் வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் கடந்த 2018ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடினார். அதன்பின் அவரை எந்த அணியும் அடுத்தடுத்தடுத்த சீசன்களில் ஏலம் கேட்கவில்லை.

இந்நிலையில் இவர்கள் இருவரும் நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் மெகா ஏலத்தில் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளனர். மேலும் நடப்பாண்டு இரு புதிய அணிகள் பங்கேற்கவுள்ளதால், நிச்சயம் இவர்கள் இவரும் நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement