
அயர்லாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியுல் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணியானது ராஸ் அதிரின் சதத்தின் மூலம், கேப்டன் பால் ஸ்டிர்லிங்கின் அரைசதத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் எடுத்தது.
இதில் அதிகபட்சமாக சதமடித்து அசத்திய ராஸ் அதிர் 100 ரன்களையும், பால் ஸ்டிர்லிங் 52 ரன்களையும் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் வியான் முல்டர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணியில் ரீஸா ஹென்றிக்ஸ், மேத்யூ பிரிட்ஸ்கீ ஆகியோர் தலா 51 ரன்களையும், ரியான் ரிக்கெல்டன் 36 ரன்களையும் சேர்த்து ஆட்டமிழந்தனர்.