
செயின்ட் லூசியா கிங்ஸ் - ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் அணிகளுக்கு இடையேயான சிபில் லீக் போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய செயின்ட் லூசியா கிங்ஸ் அணியில் ஜான்சன் சார்லஸ் 25 ரன்களையும், அகீம் அகஸ்டே 35 ரன்களையும் சேர்த்து ஆட்டமிழக்க, மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் வைஸ் 43 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தார்.
ஆனால் அவர்களைத் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். இதனால் செயின்ட் லூசியா கிங்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்களை மட்டுமே எடுத்தது. ஃபால்கன்ஸ் அணி தரப்பில் கேப்டன் கிறிஸ் கிரீன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய ஃபால்கன்ஸ் அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பிய நிலையில், அணியின் கேப்டன் கிறிஸ் கிரீன் பொறுப்புடன் விளையாடி 48 ரன்களையும், ஷமார் ஸ்பிரிங்கர் 24 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு நடையைக் கட்டினர். இதனால் ஃபால்கன்ஸ் அணியானது 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்களை மட்டுமே எடுத்தது.