
Royal Challengers Bangalore Appoint Sanjay Bangar As Head Coach (Image Source: Google)
ஐபிஎல் 2021 போட்டிக்குப் பிறகு ஆர்சிபி அணி கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகியுள்ளார். ஆர்சிபி அணி இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை. கடந்த 2016-ஆம் அண்டில் விராட் கோலி தலைமையில் ஆர்சிபி அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.
ஆர்சிபி அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த சைமன் கடிச், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2021 போட்டியிலிருந்து விலகினார். இதனால் அணியின் இயக்குநராக உள்ள மைக் ஹெஸ்ஸன், அணியின் பயிற்சியாளராகவும் பணியாற்றினார்.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் சஞ்சய் பங்கர், ஆர்சிபி அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் 2021 போட்டியில் ஆர்சிபி அணியின் பேட்டிங் ஆலோசகராக அவர் பணியாற்றினார்.