
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதில் நடைபெறும் முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இப்போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதற்காக இரு அணி வீரர்களும் தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இத்தொடருக்கான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ஏனெனில் தற்போதுள்ள ஆர்சிபி அணி முற்றிலும் ஒரு புதிய அணியாக உருவாகியுள்ளது. அதிலும் குறிப்பாக அந்த அணியின் கேப்டனாக ராஜத் பட்டிதார் நியமிக்கப்பட்டுள்ளதால், அவர் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
இதனால் இந்த முறை, கடந்த சீசனில் கேகேஆர் அணியின் ஒரு பகுதியாக இருந்த இங்கிலாந்து அணியின் அதிரடி வீரர் பில் சால்ட் இம்முறை ஆர்சிபி அணியில் விராட் கோலியுடன் இணைந்து தொடக்கம் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரைத்தொடர்ந்து அணியின் கேப்டன் ராஜத் பட்டிதார் மூன்றாம் இடத்திலும், தேவ்தத் படிக்கல் நான்காம் இடத்திலும் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.