
நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 26ஆவது லீக் போட்டியானது நேற்று ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லக்னோ அணியானது ராஜஸ்தான் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் 155 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்கினை துரத்திய ராஜஸ்தான் எளிதாக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் 20 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 144 ரன்கள் மட்டுமே குவித்து 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
ராஜஸ்தான் அணியின் இந்த தோல்வி அனைவரது மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக ராஜஸ்தான் அணியின் துவக்க வீரர்கள் ஆட்டம் இழந்ததும் அடுத்தடுத்து பின்வரிசையில் அனைவருமே வந்த வேகத்தில் நடையை கட்டியது ஏமாற்றத்தை அளித்தது. அதிலும் குறிப்பாக இளம் வீரர் ரியான் பராக் எந்த ஒரு போட்டியிலும் சிறப்பாக விளையாடாத வேளையில் அவருக்காக தொடர்ச்சியான வாய்ப்புகள் கொடுக்கப்படுவது ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று ராஜஸ்தான அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல நல்ல வாய்ப்பு இருந்தும் ரியான் பராக் 12 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 15 ரன்கள் மட்டுமே குவித்தார். இப்படி அவரது ஆட்டம் போட்டிக்கு போட்டி மாசமாக இருப்பதினால் அவர் மீது பெரிய அளவில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் நேற்றைய போட்டி முடிந்து ரியான் பராக் குறித்து சில கருத்துக்களை ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளர் சங்ககாரா பகிர்ந்து கொண்டார்.