
இந்தியாவில் நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் தற்போது இரண்டாம் கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் 38ஆவது லீக் ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து, ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடவுள்ளது. இத்தொடரில் ஏற்கெனவே இரு அணிகளும் மோதிய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. இதனால் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மும்பை இந்தியன்ஸ் அணி இப்போட்டியை எதிர்கொள்கிறது. இந்நிலையில் இன்றைய போட்டியில் விளையாடும் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
ராஜஸ்தான் ராயல்ஸ்
சஞ்சு சாம்சன் தலைமையில் நடப்புத் தொடரில் மிகச்சிறப்பாக விளையாடி வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 6 வெற்றிகளையும், ஒரு தோல்வி என 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடம் வகித்து வருகிறது. ராஜஸ்தான் அணி, பேட்டிங், பந்து வீச்சு, ஃபீல்டிங் என அனைத்திலும் அசத்தி வருகிறது. அணியின் பேட்டிங்கில் சஞ்சு சாம்சன், ரியான் பராக், ஜோஸ் பட்லர், ஷிம்ரான் ஹெட்மெயர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோவ்மன் பாவெல் என பேட்ஸ்மேன்கள் அணிக்கு வலு சேர்க்கின்றனர்.