
இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். பேட்டிங் மற்றும் பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்து துறைகளிலும் அசத்தி வரும் இவர், இங்கிலாந்து அணிக்காக செய்த சாதனைகள் ஏறாளம்.
அதில் முக்கியமானவை 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வெல்ல காரணமாக இருந்தது, மற்றும் கையிலிருந்து நழுவியது என நினைத்த ஆஷஸ் டெஸ்ட் தொடரை வென்றது என பல த்ரில்லர் படங்களை ரசிகர்களுக்கு பரிசாக வழங்கியவர்.
தற்போது ஸ்டோக்ஸ் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிவருகிறார்.
இந்நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியில் பென் ஸ்டோக்ஸ் ஒரு பந்தை கேட்ச் பிடிக்க முயன்றபோது இடது கையில் காயமடைந்தார். பின்னர் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், கையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக பென் ஸ்டோக்ஸ் அறிவித்துள்ளார்.