
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற மூன்றாவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. செப்பாக்கில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா, வில் ஜேக்ஸ், ரியான் ரிக்கெல்டன் உள்ளிட்டோர் சோற்ப ரன்களுக்கு நடையைக் கட்டினர். பின்னர் சூர்யகுமார் யாதவ் 29 ரன்களுக்கும், தீலக் வர்மா 31 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு மும்பை அணி 155 ரன்கள் எடுத்தது. சிஎஸ்கே அணி தரப்பில் நூர் அஹ்மத் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இதையடுத்து 155 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 22 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தியதுடன் 53 ரன்களி விக்கெட்டை இழந்தார். இருப்பினும் இறுதிவரை களத்தில் இருந்த ரச்சின் ரவீந்திரா 65 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் சிஎஸ்கே அணி 19.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது.