
இந்தியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பை தொடரின் நடப்பு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற குரூப் பி அணிகளுக்கு இடையேயான 2ஆவது சுற்று ஆட்டத்தில் மஹாராஷ்டிரா மற்றும் சர்வீஸஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மும்பையில் உள்ள ஷரத் பவார் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டஸ் வென்ற மஹாராஷ்டிரா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய சர்வீசஸ் அணியில் சூரஜ் வஷிஸ்ட் - ரவி சௌகான் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ரவி சௌகான் 8 ரன்னிலும், சூரஜ் வஷிஸ்ட் 22 ரன்னிலும் விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய கேப்டன் மோஹித் அவஸ்தி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். பின் 10 பவுண்டரிகளுடன் 61 ரன்களை எடுத்திருந்த நிலையில் மெஹித் அவஸ்தி தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய பலிவால் 22 ரன்னிலும், வினீத் தாங்கர் 14 ரன்னிலும், விகாஸ் ஹத்வாலா 7 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர்.
அதன்பின் களமிறங்கிய வீரர்களில் அர்ஜுன் ஷர்மா 24 ரன்களையும், பூனிய 26 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். இதனால் சர்விசஸ் அணி 48 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 204 ரன்களைச் சேர்த்தது. மஹாராஷ்டிரா அணி தரப்பில் பிரதீப் தாதே, சத்யஜீத் பச்சாவ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், முகேஷ் சௌத்ரி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய மஹாராஷ்டிரா அணி அதிரடியான தொடக்கத்தைப் பெற்றனர்.