தென் ஆப்பிரிக்காவின் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஹென்ரிச் கிளாசன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்து உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். தற்போது 33 வய்தை மட்டுமே எட்டிவுள்ள கிளாசென் ஓய்வை அறிவித்திருப்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதுகுறித்து ஹென்ரிச் கிளாசென் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விலக முடிவு செய்துள்ளதை அறிவிக்கும் இந்த நாள் எனக்கு ஒரு சோகமான நாளாகும். எனக்கும் என் குடும்பத்திற்கும் எதிர்காலத்தில் எது சிறந்தது என்பதை முடிவு செய்ய எனக்கு நீண்ட நேரம் பிடித்தது. இது உண்மையிலேயே மிகவும் கடினமான முடிவு, ஆனால் அதே நேரத்தில் நான் அதை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன்
முதல் நாளிலிருந்தே, என் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம். எனது சிறுவயது முதல் கனவு கண்ட அனைத்தும் அதுதான். என் மார்பில் புரோட்டியாஸ் பேட்ஜுடன் விளையாடியது என் வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய மரியாதையாக இருந்தது, எப்போதும் இருக்கும். இந்த முடிவு எனக்கு வாய்ப்பளிப்பதால், எனது குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிட ஆவலுடன் காத்திருக்கிறேன்.