Advertisement

விராட் கோலியுடன் பணியாற்றுவதில் மகிழ்ச்சி - டிராவிட் புகழாரம்!

கோலியின் கேப்டன்சி நீக்கம் குறித்த கேள்விக்கு ராகுல் டிராவிட் அளித்த லாவகமான பதில்.

Advertisement
SA v IND: I'm Looking Forward To Supporting Virat Kohli, Says Rahul Dravid
SA v IND: I'm Looking Forward To Supporting Virat Kohli, Says Rahul Dravid (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Dec 25, 2021 • 07:29 PM

இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.  இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், செய்தியாளர்களை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சந்தித்தார்.

Bharathi Kannan
By Bharathi Kannan
December 25, 2021 • 07:29 PM

செய்தியாளர் சந்திப்பு என்றாலே புதிய சர்ச்சை உருவாகிவிடுமே. இதனால் களத்தில் வேகப்பந்தவீச்சாளர்களை எப்படி எதிர்கொள்வாரோ, அதே போல் செய்தியாளர்களின் கேள்வியையும் எதிர்கொண்டார்.அவர் 

Trending

அதில் பேசிய அவர், “இந்திய அணியின் பிளேயிங் வெலன் குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை. போட்டி தொடங்குவதற்கு முன் தான் முடிவு எடுக்கப்படும். ரஹானே ஒரு அனுபவ வீரர். தென்னாப்பிரிக்க தொடருக்காக சிறப்பாக பயிற்சி எடுத்து தயராகி உள்ளார். நானும் அவரின் பேட்டிங் குறித்து உரையாடினேன். ரஹானே இந்திய அணியின் ஒரு அங்கம். அவருக்கு துணை நிற்பேன்

விராட் கோலி போல் உலகில் சில வீரர்கள் தான் டெஸ்ட் கிரிக்கெட் மீது காதல் வைத்து இருப்பார்கள். எப்போதும் போட்டியையும், சவாலையும் விரும்ப கூடியவர் விராட் கோலி. அவர் டெஸ்டில் முதல் சதம் விளாசிய போது நான் அணியில் இருந்தேன். இப்போது பயிற்சியாளராக அவருடன் பணியாற்றுவதில் மகிழ்ச்சி” என்று தெரிவித்தார்.

பத்திரிகையாளர் சந்திப்பு இப்படி சுமூகமாக சென்று கொண்டிருந்த நிலையில், திடீரென்று ஒரு செய்தியாளர் விராட் கோலியின் ஒருநாள் அணிக்கான கேப்டன் பதவி நீக்கம் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேள்வி கேட்டார். 

இதற்கு பதிலளித்த அவர், “கிரிக்கெட்டின் இரண்டு பிரிவுக்கு இரண்டு கேப்டன்களை நியமித்தது தேர்வுக்குழுவின் பணி.தேர்வுக்குழுத் தான் அதனை முடிவு செய்யும். மற்றபடி வீரர்களிடம் டிரெசிங் ரூம்மில் என்ன பேசினேன் என்பதை வெளிப்படையாக என்னால் கூற முடியாது” என்று பதில் அளித்தார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement