
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றிருந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது.இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீச முடிவுசெய்தது.
இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் ஜேசன் ராய், டேவிட் மாலன், பென் டக்கெட் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இதையடுத்து ஜோடி சேர்ந்த ஹாரி ப்ரூக் - கேப்டன் ஜோஸ் பட்லர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்ததுடன், 73 ரன்களை பார்ட்னர்ஷிப் முணையிலும் அமைத்தனர். அதன்பின் சதமடிபார் என எதிர்பார்க்கப்பட்ட ஹார் ப்ரூக் 4 சிக்சர், 7 பவுண்டரிகளுடன் 80 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.