Advertisement
Advertisement
Advertisement

நாங்கள் இந்த போட்டியில் நினைத்தது வேறு - கேஎல் ராகுல்!

இந்த போட்டியில் நாங்கள் ஸ்பின்னர்களை ஆட்டத்திற்குள் கொண்டுவர வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் போட்டியின் ஆரம்பத்திலேயே வேகப்பந்து வீச்சாளர்கள் மிகவும் கட்டுக்கோப்புடன் பந்துவீசி அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தினர் என கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan December 17, 2023 • 19:59 PM
நாங்கள் இந்த போட்டியில் நினைத்தது வேறு - கேஎல் ராகுல்!
நாங்கள் இந்த போட்டியில் நினைத்தது வேறு - கேஎல் ராகுல்! (Image Source: Google)
Advertisement

கேஎல் ராகுல் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டியானது இன்று ஜோஹன்னஸ்பர்க் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ளது.

அந்த வகையில் இன்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் தங்களது அணி முதலில் பேட்டி செய்யும் என்று அறிவித்தார். அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய அந்த அணி 27.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்கள் மட்டுமே குவித்தது. இந்திய அணி சார்பாக அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டுகளையும், ஆவேஷ் கான் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். 

Trending


அதன்பின் பின்னர் 117 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 16.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 117 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் தமிழக வீரரான சாய் சுதர்ஷன் 55 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். 

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் கேஎல் ராகுல், “இந்த போட்டியில் வெற்றி பெற்றது உண்மையிலேயே எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நாங்கள் இந்த போட்டியில் நினைத்தது வேறு.. ஆனால் இங்கு நடந்தது முற்றிலும் வேறு.. இந்த போட்டியில் நாங்கள் ஸ்பின்னர்களை ஆட்டத்திற்குள் கொண்டுவர வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் போட்டியின் ஆரம்பத்திலேயே வேகப்பந்து வீச்சாளர்கள் மிகவும் கட்டுக்கோப்புடன் பந்துவீசி அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

இந்த முதலாவது போட்டியில் எங்களது அணியின் பந்துவீச்சாளர்களின் செயல்பாடு மிக பிரமாதமாக இருந்தது. அவர்களது சிறப்பான பந்துவீச்சே இந்த வெற்றிக்கு காரணமாக நான் பார்க்கிறேன். எல்லோருமே நாட்டிற்காக தங்களது சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைப்பார்கள். அந்த வகையில் நமது அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் அனைவரும் தங்களது முழு பங்களிப்பை வழங்கி இருந்தனர். இளம் வீரர்கள் தங்களுக்கு கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி சர்வதேச கிரிக்கெட்டில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளனர்” என தெரிவித்துள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement