பாக்ஸிங் டே டெஸ்ட்: இங்கிடி, ரபாடா பந்துவீச்சில் சீட்டுக்கட்டாய் சரிந்த விக்கெட்டுகள்!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 327 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
தென் ஆப்பிரிக்க - இந்தியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 26ஆம் தேதி தொடங்கியது.
தென் ஆப்பிரிக்க மண்ணில் இந்தியா டெஸ்ட் தொடரை வென்றதே இல்லை என்பதால் இந்த தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
Trending
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்கள் கேஎல் ராகுல், மயங்க் அகர்வால் சிறப்பாக விளையாடினர்.
மயங்க் அகர்வால் 60 ரன்களுக்கு ஆட்டமிழக்க, புஜாரா முதல் பந்திலேயே டக் அவுட்டனார். லுங்கி இங்கிடி ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதால் இந்தியாவுக்கு சற்று பின்னடைவாக அமைந்தது. இருப்பினும் விராட் கோலி பொறுப்புடன் விளையாடி 35 ரன்கள் சேர்த்த போது தேவையில்லாத ஷாட் ஆடி அவுட்டானார்.
இதனைத் தொடர்ந்த கேஎல் ராகுலுடன் ஜோடி சேர்ந்த ரஹானே, சற்று அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய ராகுல் 7ஆவது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார். முதல்நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் எடுத்தது. ரஹானே 40 ரன்களுடனும், ராகுல் 122 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இதனிடையே 2ஆவது நாள் ஆட்டம் மழையால் முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனால் ஒரு பந்த கூட வீசப்படாத நிலையில், ஆட்டம் கைவிடப்பட்டது. இந்த நிலையில் மூன்றாவது நாள் ஆட்டம் தொடங்கியது. கேஎல் ராகுல் கூடுலாக 1 ரன் எடுத்து 123 ரன்களில் வெளியேற, நன்றாக விளையாடிய ரஹானேவும் 48 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதத்தை தவறவிட்டார்.
இந்திய அணியை சரிவிலிருந்து மீட்பார் என எதிர்பார்க்கப்பட்ட தமிழக வீரர் அஸ்வின் (4), ரிஷப் பந்த் (8), ஷர்துல் தாக்கூர் (4), முகமது ஷமி (8), பும்ரா (14) என அடுத்தடுத்து வெளியேறினர். இதனால் இந்திய அணி 327 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் லுங்கி இங்கிடி 6 விக்கெட்டுகளையும், காகிசோ ரபாடா 3 விக்கெட்டுகளையும், மார்கோ ஜான்சென் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
Win Big, Make Your Cricket Tales Now