இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டி ஏற்கனவே நடைபெற்று முடிந்த வேலையில் இந்திய அணி அந்த போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வீழ்த்தி இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
அதனைத்தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென் ஆப்பிரிக்க அணியானது இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.
அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 46.2 ஓவர்களில் 211 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதனை தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 42.3 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 215 ரன்கள் குவித்து எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.