
SA vs IND, 3rd ODI: South Africa beat India by 4 runs and Clinch the series 3-0 (Image Source: Google)
தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கேப்டவுனில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பந்துவீச தீர்மானித்தார்.
அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் ஜே மாலன், ஐடன் மார்கரம், டெம்பா பவுமா ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த குயின்டன் டி காக் - வெண்டர் டூசென் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் டி காக் தனது 17ஆவது ஒருநாள் சதத்தைப் பதிவுசெய்ய, வெண்டர் டுசெனும் அரைசதம் கடந்தார்.