
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரு ஆட்டங்கள் நடைபெற்று முடிந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் சமநிலை வகிக்கின்றன.
இந்நிலையில் ஜனவரி 11 முதல் 15 ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறும் அணி இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றும் என்பதனால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஏற்கனவே இந்திய அணி செஞ்சூரியன் நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் போது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்று இருந்ததால் ஜோகனஸ்பர்க் நகரில் நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டாவது போட்டியில் கேப்டன் விராத் கோலியின் விலகல் இந்திய அணியில் பெரிய பாதகமாக அமைந்தது. முதுகு வலி காரணமாக இரண்டாவது போட்டியில் விராத் கோலி விளையாடாததால் அவருக்கு பதிலாக கேஎல் ராகுல் அணியை வழி நடத்தினார்.