
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியதுடன, 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது இன்று (நவம்பர் 10) க்கெபெர்ஹாவில் நடைபெறவுள்ளது.
இத்தொடரில் ஏற்கெனவே இந்திய அணி முதல் போட்டியிலேயே அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளதால், இப்போட்டியில் தங்கள் ஆதிக்கத்தை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் மறுபக்கம் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தென் ஆப்பிரிக்க அணி இந்த போட்டியில் விளையாடும் என்பதால், இந்த ஆட்டத்தில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இரு அணிகளின் உத்தேச லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
இந்திய அணி