SA vs IND: மூன்றாவது டெஸ்டில் விராட் விளையாடுவாரா? - டிராவிட்டின் பதில்!
இந்திய டெஸ்ட் அணி கேப்டன் விராட் கோலியின் உடற்தகுதி குறித்த அப்டேட்டை இந்திய அணி தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, 2ஆவது டெஸ்ட்டில் தோல்வியடைந்தது.
இதையடுத்து தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் வரும் 11ஆம் தேதி நடைபெறுகிறது.
Trending
இதற்கிடையில், முதல் டெஸ்ட்டில் விளையாடிய இந்திய அணி கேப்டன் விராட் கோலி, 2ஆவது டெஸ்ட்டில் காயம் காரணமாக ஆடவில்லை. அந்த போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. 2ஆவது டெஸ்ட்டில் கேப்டன் விராட் கோலி களத்தில் இல்லாததன் பின்னடைவை இந்திய அணி உணர்ந்தது.
விராட் கோலி களத்தில் இருப்பதும் அவரது அணுகுமுறையுமே இந்திய அணிக்கு பெரிய உத்வேகமாக இருக்கும். அந்த உத்வேகத்தை 2ஆவது டெஸ்ட்டில் இந்திய அணி இழந்தது. இந்நிலையில் 3ஆவது டெஸ்ட்டில் விராட் கோலி ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், விராட் கோலியின் ஃபிட்னெஸ் குறித்து தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அப்டேட் செய்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள ராகுல் டிராவிட், “விராட் கோலி நன்றாக இருக்கிறார். கேப்டவுனில் 2 நெட் செசன்களில் ஆடினால் போட்டிக்கு தயாராகிவிடுவார் என நினைக்கிறேன். நான் அவருடன் பேசியவரை, 3ஆவது டெஸ்ட்டுக்கு இன்னும் 4 நாட்கள் இருப்பதால் அதற்குள்ளாக கண்டிப்பாக தயாராகிவிடுவார்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now