
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் தொடக்க வீரரான ஷுப்மன் கில் 19 வயதுக்குட்பட்டோர் இந்திய அணிக்காக விளையாடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதன்மை இந்திய அணிக்கு தேர்வானார். மிக இளம் வயதிலேயே இந்திய அணியில் அடியெடுத்து வைத்த ஷுப்மன் கில் ஆரம்பத்திலிருந்தே அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் தற்போது உருவெடுத்துள்ளார்.
அதிலும் குறிப்பாக ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு அடுத்து இந்திய அணியின் பெரிய வீரராக மாறுவார் என்று பலராலும் பாராட்டப்பட்டு வருகிறார். ஆனாலும் ஒருநாள், டி20 போட்டிகளை காட்டிலும் டெஸ்ட் போட்டிகளில் அவர் மிகவும் தடுமாற்றமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறார். அதிலும் குறிப்பாக இந்திய மண்ணை தாண்டி வெளிநாடுகளில் நடைபெறும் போட்டியில் அவரது தடுமாற்றம் மிக அதிகமாக உள்ளதை அனைவருமே சுட்டிக்காட்டி சில கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
ஆசிய கண்டத்தில் அவரது சராசரி 39.25-ரன்களே இருக்கிறது. அதை தவிர்த்து சேனா நாடுகள் என்று அழைக்கப்படும் (தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா) போன்ற நாடுகளில் ஷுப்மன் கில்லின் சராசரி 25 ரன்களாக மட்டுமே உள்ளது. இப்படி டெஸ்ட் கிரிக்கெட்டில் ஷுப்மன் கில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது அனைவரது மத்தியிலும் கேள்வியை எழுப்பி உள்ளது.