
South Africa vs Pakistan 1st T20 Dream11 Prediction: தென் ஆப்பிரிக்கா அணியானது சொந்த மண்ணில் பாகிஸ்தானுக்கு அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரிலும், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயானடி20 தொடரானது நாளை (டிசம்பர் 10) டர்பனில் உள்ள் கிங்ஸ் மீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதில் தென் ஆபபிரிக்க அணியானது ஏற்கென்வே இந்திய அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவிய கையோடு இத்தொடரை எதிர்கொள்ளவுள்ளது. அதிலும் தற்சமயம் தென் ஆப்பிரிக்க அணியானது ஹென்ரிச் கிளாசென் தலமையில் களமிறங்கவுள்ளது. மறுபக்கம் பாகிஸ்தான் அணி ஜிம்பாப்வே டி20 தொடரை வென்ற கையோடு இந்த தொடரை எதிர்கொள்கிறது. இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் நிறைந்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
SA vs PAK 1st T20I: போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள்: தென் ஆப்பிரிக்கா vs பாகிஸ்தான்ecember 10, 2024 (Tuesday)
- இடம்: கிங்ஸ்மீத் மைதானம், டர்பர்
- நேரம்: டிசம்பர் 10, இரவு 9.30 மணி (இந்திய நேரப்படி)