
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று செஞ்சூரியனில் நடைபெற்றது.
இப்போட்டி இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு தொடங்க இருந்த நிலையில் மழை குறுக்கிட்டத்தன் காரணமாக போட்டி தொடங்குவது தாமதமானது. அதன்பின் இப்போட்டி 11 ஓவர்களாக குறைக்கப்பட்டு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் குயின்டன் டி காக் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினார். இதையடுத்து ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் 21 ரன்களிலும், ரைலி ரூஸோவ் 10 ரன்களிலும், கேப்டன் ஐடன் மார்க்ரம் 14 ரன்களிலும், ஹென்ரிச் கிளாசென் ஒரு ரன்னிலும், என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.