Advertisement
Advertisement
Advertisement

எஸ்ஏ20 2024: பந்துவீச்சில் கலக்கிய ஸ்டொய்னிஸ்; ராயல்ஸை வீழ்த்தி சூப்பர் ஜெயண்ட்ஸ் அபார வெற்றி!

எஸ்ஏ20 தொடரில் நேற்று நடைபெற்ற பார்ல் ராயல்ஸ் அணிக்கெதிரான போட்டியில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

Bharathi Kannan
By Bharathi Kannan January 27, 2024 • 11:29 AM
எஸ்ஏ20 2024: பந்துவீச்சில் கலக்கிய ஸ்டொய்னிஸ்; ராயல்ஸை வீழ்த்தி சூப்பர் ஜெயண்ட்ஸ் அபார வெற்றி!
எஸ்ஏ20 2024: பந்துவீச்சில் கலக்கிய ஸ்டொய்னிஸ்; ராயல்ஸை வீழ்த்தி சூப்பர் ஜெயண்ட்ஸ் அபார வெற்றி! (Image Source: Google)
Advertisement

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றுவரும் இரண்டாவது சீசன் எஸ்ஏ20 லீக் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 19ஆவது லீக் ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் - டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பார்லில் உள்ள போல்ண்ட் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்களாக டோனி டி ஸோர்ஸி - மேத்யூ பிரீட்ஸ்கி இணை களமிறங்கினர். இதில் டோனி டி ஸோர்ஸி 10 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து மேத்யூ பிரீட்ஸ்கி 12 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த ஜேஜே ஸ்மட்ஸ் - குயின்டன் டி காக் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

Trending


தொடர்ந்து அதிரடியாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்ததுடன், 118 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். அதன்பின் 7 பவுண்டரி, ஒரு சிக்சர் என 52 ரன்கள் எடுத்த நிலையில் ஜேஜே ஸ்மட்ஸ் விக்கெட்டை இழந்தார். இதனையடுத்து களமிறங்கிய ஹென்றிச் கிளாசெனும் அதிரடியாக விளையாடி பவுண்டரியும், சிக்சர்களும் விளாச அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. 

இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த குயின்டன் டி காக் 5 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 83 ரன்களையும், ஹென்றிச் கிளாசென் 9 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 30 ரன்களையும் விளாசினர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்களைச் சேர்த்துள்ளது. பார்ல் ராயல்ஸ் அணி தரப்பில் லுங்கி இங்கிடி, ஒபேத் மெக்காய், ஜார்ன் ஃபோர்டுயின் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர். 

அதன்பின் கடின இலக்கை நோக்கி களமிறங்கிய பார்ல் ராயல்ஸ் அணிக்கு ஜேசன் ராய் - ஜோஸ் பட்லர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஜேசன் ராய் 12 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய விஹான் லூப் 2, கேப்டன் டேவிட் மில்லர் 3 ரன்களில் என சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் மறுபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோஸ் பட்லர் 45 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

அதன்பின் களமிறங்கிய மிட்செல் வான் பியூரன் 11 ரன்களுக்கும், ஆண்டில் பெஹ்லுக்வாயோ 18 ரன்களுக்கும், ஃபோர்டுன் 13 ரன்களுக்கும், ஃபேபியன் ஆலன் 9 ரன்களிலும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனைத்தொடர்ந்து களமிறங்கிய வீரர்களாலும் எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் விக்கெட்டை இழந்தனர். இதனால் அந்த அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தும் 133 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தரப்பில் மார்கஸ் ஸ்டொய்னிஸ் 3 விக்கெட்டுகளையும், ரீஸ் டாப்லி, கேப்டன் கேசவ் மகாராஜ் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதன்மூலம் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் பார்ல் ராயல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement