
மூன்றாவது சீசன் எஸ்ஏ20 லீக் தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 4ஆவது லீக் ஆட்தில் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் மற்றும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஜோஹன்னஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டஸ் வென்ற ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய கேப்டவுன் அணிக்கு ரஸ்ஸி வேன்டர் டுசென் மற்றும் ரீஸா ஹென்றிக்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ரீஸா ஹென்றிக்ஸ் 4 ரன்களிலும், ரஸ்ஸி வென்டர் டுசென் 4 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர் . அதன்பின் களமிறங்கிய கொன்னர் 8 ரன்களிலும், டெவால்ட் பிரீவிஸ் 14 ரன்களுக்கும், அஸ்மத்துல்லா ஒமர்ஸார் ஒரு ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். இதனால் அந்த அணி 75 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் ஜோடி சேர்ந்த ஜார்ஜ் லிண்டே மற்றும் டெலானோ போட்ஜீட்டர் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் விக்கெட் இழப்பை தடுத்தனர்.
தொடர்ந்து சிறப்பான் ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் 65 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜார்ஜ் லிண்டே 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 48 ரன்களையும், போட்ஜீட்டர் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 44 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தனர். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்களைச் சேர்த்தது. ஜோபர்க் அணி தரப்பில் டேவிட் வைஸ், சிபாம்லா, எவான் ஜோன்ஸ், தப்ரைஸ் ஷம்ஸி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.