
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரை பின் பற்றி உலகின் பல்வேறு நாடுகளும் டி20 பிரீமியர் லீக் தொடர்களை நடத்தி வருகின்றனர். அதில் ஆஸ்திரேலியாவின் பிக் பேஷ், வெஸ்ட் இண்டீஸின் கரீபியன் பிரீமியர் லீக், பாகிஸ்தானின் பாகிஸ்தான் சூப்பர் லீக், வங்கதேசத்தின் பங்களதேஷ் பிரீமியர் லீக், இலங்கையின் லங்கா பிரீமியர் லீக் என ஒவ்வொரு நாடும் தங்களுக்கென தனி டி20 தொடர்களை நடத்தி வருகின்றனர்.
அந்தவகையில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியமும் கடந்தாண்டு முதல் எஸ்ஏ20 லீக் தொடரை நடத்தி வருகிறது. தற்போதுவரை இரண்டு சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ள எஸ்ஏ20 லீக் தொடரானது மூன்றாவது சீசனுக்காக தற்போதில் இருந்தே தயாராகி வருகிறது. இந்நிலையில் இத்தொடருக்கான வீரர்கள் ஏலமும் நடைபெறவுள்ளதால், அதற்காக அனைத்து அணிகள் தயாராகி வருகின்றன.
மேலும் இத்தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்கவைத்த, விடுவித்த மற்றும் ஏலத்திற்கு முன்னதாக வாங்கிய வீரர்களின் பட்டியலையும் சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்நிலையில் இத்தொடருக்கான போட்டி அட்டவணையை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி அடுத்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி தொடங்கும் இத்தொடரின் இறுதிப்போட்டியானது பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி நடைபெறவுள்ளது.