எஸ்ஏ 20 லீக் தனக்கு தலைமைப் பண்பை கற்றுக்கொடுத்துள்ளது - ஐடன் மார்க்ரம்!
தென் ஆப்பிரிக்க டி20 லீக் தனக்கு தலைமைப்பண்பு குறித்து நிறைய விஷயங்களைக் கற்றுக் கொடுத்ததாக தென் ஆப்பிரிக்க அணியின் அய்டன் மார்கரம் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரைப் போன்றே தென் ஆப்பிரிக்காவில் எஸ் ஏ லீக் டி20 தொடர் கடந்தாண்டு தொடங்கப்பட்டது. இதில் ஐபிஎல் தொடரில் பங்குபெற்றுள்ள சென்னை, மும்பை, டெல்லி, ராஜஸ்தான், லக்னோ மற்றும் ஹைதராபாத் அணிகளே அத்தொடரின் 6 அணிகளின் உரிமையாளர்களாக உள்ளனர். இத்தொடரில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியை ஐடன் மார்கம் கேப்டனாக வழிநடத்துகிறார். அவரது தலைமையிலான சன்ரைசர்ஸ் அணி தென் ஆப்பிரிக்க டி20 லீக் தொடரின் அறிமுக சீசனில் சாம்பியன் பட்டம் வென்றது.
இந்த நிலையில், தென் ஆப்பிரிக்க டி20 லீக் தனக்கு தலைமைப்பண்பு குறித்து நிறைய விஷயங்களைக் கற்றுக் கொடுத்ததாக தென் ஆப்பிரிக்க அணியின் ஐடன் மார்கரம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், “ரன்கள் குவிப்பது என்பது எப்போதும் சிறப்பானது. டி20 லீக் என்பது கண்டிப்பாக வித்தியாசமானது. உங்களுக்கு டி20 போட்டிகள் நம்பிக்கையை அளிக்கும்.
Trending
அணியை கேப்டனாக வழிநடத்துவது என்பது மிகவும் பெருமையான விஷயம். அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக அணியை வழிநத்துவது எனக்கு கிடைத்திருக்கும் மிகப் பெரிய வரம். சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியின் கேப்டனாக நான் தலைமைப்பண்பு குறித்து நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now