SA20 League: கேப்டவுனை வழியனுப்பி வைத்தது ஜோபர்க் சூப்பர் கிங்ஸ்!
எம்ஐ கேப்டவுன் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
தென் ஆப்பிரிக்கா டி20 லீக் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ், ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் ஆகிய 3 அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறிவிட்டன. இதையடுத்து 4ஆவது இடத்திற்கான போட்டியில் நேற்று நடந்த அரையிறுதிப் போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் எம்ஐ கேப்டவுன் அணி, ஜோபர்க் சூப்பர் கிங்ஸை எதிர்கொண்டது. ஜோஹன்னஸ்பர்க்கில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப் டவுன் அணி பீல்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் குவித்தது. ஏற்கனவே புள்ளிப் பட்டியலில் 2 ஆவது இடத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி தனக்கு எந்த கவலையும் இல்லை என்பதற்கேற்ப அதிரடி காட்டியது. தொடக்க வீரர்கள் இருவரும் டக் அவுட்டில் வெளியேற 3ஆவதாக வந்த ஹென்றிக்ஸ் 48 பந்துகளில் ஒரு சிக்சர் 11 பவுண்டரிகள் உள்பட 81 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார். மேத்யூ வேட் 18 பந்துகளில் ஒரு சிக்சர் 8 பவுண்டரிகள் உள்பட 40 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் 189 ரன்கள் குவித்தது.
Trending
இதையடுத்து கடின இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் கேப் டவுன் அணிக்கு தொடக்க முதலே அதிர்ச்சி தான். ரசீவ் வாண்டர் டூசென் 20 ரன்களிலும், மார்செல் 4 ரன்னிலும், பிரேவிஸ் 27 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன் பிறகு வந்த பின் வரிசை வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற மும்பை இந்தியன்ஸ் கேப் டவுன் அணி 17.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. இதன் மூலம் அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்து நடையை கட்டியது. ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதே போன்று டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் தொடரிலிருந்து வெளியேறியது. இன்று நடக்கும் போட்டியில் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியும், 4ஆவது இடத்தில் இருக்கும் பார்ல் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. ஏற்கனவே அரையிறுதிப் போட்டிக்கு 4ஆவது அணியாக தகுதி பெற்றுள்ள நிலையில், இந்தப் போட்டியில் பார்ல் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றால் 3ஆவது இடம் பிடிக்கும். ஏற்கனவே 3ஆவது இடத்தில் இருக்கும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 4ஆவது இடம் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now